6. ஆசிரியர்கள் பொறுமையின் சிகரங்கள்

பின்லாந்து கல்விப் பயணம் – 6

பின்லாந்து ஆசிரியர்களுக்கு எந்த அவசரமும் இல்லை. நான் கவனித்த இரண்டு வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு எந்த அவசரமோ பரபரப்போ இல்லை.

எல்லா குழந்தைகளும் தனிப்பட்டவர்கள் (Children are unique) என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். நான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டது போல் ஒரு கருத்து அறிமுகமாகி, அதைப் புரிந்துகொண்டு, அது பற்றி நாம் ஆய்வு செய்து, அது நம் கருத்தாகி, நம் செயல்கள் அக்கருத்துக்கேற்றபடி அமைய… என்ற படிநிலைகளின் வழியாகக் கடந்து சென்றுள்ளார்கள் பின்லாந்து ஆசிரியர்கள் என்று நம்பலாம்.

Ilona Taimela என்ற கல்வி ஆலோசகர் கூறும்போது “நாங்கள் சிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைவிட உலக்திலேயே சிறந்த முறையில் கற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். (We ( the teachers of Finland) want to be the best learners) என்றார் பெருமையோடு. அது உண்மையென்று அங்குள்ள பள்ளியைப் பார்வையிட்டபோதும், அங்குள்ள ஆசிரியர்களோடு கலந்துரையாடியபோதும் தெரிய வந்தது.
ஒரு கற்றல் இலக்கின் அடிப்படையில் செயல்பாடுகள் முடிவு செய்யப்படுகின்றன. நடைமுறைப்படுத்துவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் எல்லா குழந்தைகளும் ஒரேபோல் ஒரேநேரத்தில் ஒரு செயல்பாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஏன் எதிர்பார்ப்பதில்லையென்றால் குழந்தைகள் தனிப்பட்டவர்கள் என்ற கருத்து அவர்களின் செயல்களை முடிவு செய்கின்றன.
அதனால் ஒரு கற்றல் இலக்கை குழந்தை அடைய போதுமான காலஅவகாசம் கொடுக்கிறார்கள். ஒரே கற்றல் இலக்கிற்கு பல்வேறு செயல்பாடுகளை வடிவமைக்கிறார்கள்.

நண்பர்கள் பார்வையிட்ட ஒரு பள்ளியில் முப்பத்தைந்து மொழிகளைக் கற்பிக்கிறார்களாம். காரணம் வெளிநாட்டிலிருந்து மக்கள் அங்கு குடிவந்திருக்கிறார்கள். ஒரு மொழி பேசும் நான்கு குழந்தைகள் இருப்பின் அவர்களுக்காக அம்மொழி கற்பிக்கும் ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடித்து கற்பிக்க வழிவகை செய்கிறார்கள். இந்த நிலையில் பெற்றோர்களுள் சிலர் தாற்காலிக ஆசிரியராக மாறுகிறார்கள். இங்கு இயன்றதையெல்லாம் குழந்தைகளுக்காகச் செய்கிறார்கள்.

குழந்தை கற்றுக்கொண்டால் அது ஆசிரியரின் திறமை. குழந்தை கற்றுக்கொள்ளாவிட்டால் அது அக்குழந்தையின் திறமையின்மை என்று யாரும் நினைப்பதில்லை. பள்ளியில் ஒரு குழந்தை சேர்ந்தால் அக்குழந்தையின் திறன் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியும் என்பதிலேயே ஆசிரியர்களின் கவனம் இருக்கும். அக்குழந்தையின் திறன் வளர்ச்சியின் முழுப்பொறுப்பையும் ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். அவர் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் பரவாயில்லை.

ஒரு வகுப்பிலேயே அனைத்துத் திறன்களையும் கற்றுத்தேற வேண்டும். (எழுத்துக்களை அறிமுகம் செய்யும் ஆண்டிலேயே எல்லா எழுத்துகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். புதுச்சொற்களை வாசிக்க வேண்டும். ஒருமுறை சொன்னாலும் போதாமல் ஆண்டில் பலமுறை அக்குழந்தை எழுத்து வரிசையைச் சொல்லிக்காட்ட வேண்டும், எழுதிக் காட்டவேண்டும் என்ற முட்டாள்தனமான எதிர்பார்ப்பு அங்கு எவரிடமும் இல்லை.) பிறகு அடுத்த வகுப்புக்கான திறன்களைக் கற்றுத்தேற வேண்டும் என்று கற்களை ஒன்றின்மீது ஒன்றென அடுக்கி வைப்பதுபோல் கற்றல் நடக்கும் என்று ஆசிரியர்கள் கருதுவதில்லை, செயல்படுவதுமில்லை.

பள்ளிக்கூடத்தில், பல காலத்தில், பல செயல்பாடுகளின் மூலம் நடக்கும் ஒன்றுதான் கற்றல். அதுவன்றி குறுகியகால செயல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டுள்ளார்கள். அதனால் அசாத்திய பொறுமை காக்கிறார்கள். குழந்தையால் வாசிக்க முடியவில்லை. குழந்தைக்குப் பதில் தெரியவில்லை என்றால் நம் மனத்துக்குள் பொங்கும் கோபமும் ஏமாற்றமும் பின்லாந்து ஆசிரியர்களுக்கு ஏற்படுவதில்லை என்று சொல்லலாம்.

என் தனிப்பட்ட கருத்து –

குழந்தைகளிடம் ஏற்பாடும் எல்லா விளைவுகளுக்கும், கற்றல் சார்ந்தும் அல்லாமலும், தானே பொறுப்பு என்று ஆசிரியர் எப்போது நினைக்கிறாரோ அப்போது அந்த பொறுப்புணர்வு அர்ப்பணிப்பைத் தருகிறது. இந்த அர்ப்பணிப்பு நேரம் காலம் பார்க்காமல் உழைக்கத் தூண்டுகிறது. குழந்தைகளோடு நெருங்கிப் பழகும்போது அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய திறன் வளர்ச்சியைக் கவனிக்கும்போது மகிழ்ச்சி பொங்குகிறது. இம்மகிழ்ச்சி தன் பணியை ரசித்து செய்யத் தூண்டுகிறது.

பொறுப்புணர்வும் பொறுமையும் ஆசிரியரின் இரண்டு கண்கள் என்பேன்.

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s