அதிகாரத்தை இழக்க நீங்கள் தயாரா…?

 

நாகர்கோவிலிலுள்ள ஆதர்ஷ் வித்யா கேந்தராவில் இந்தக் கல்வியாண்டு முதல் Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் முன்னோடியாக நடந்த மூன்று நாள் பயிற்சியில் கலந்துகொண்ட அப்பள்ளியின் தமிழ்த்துறைத் தலைவர் திரு. க. கருணாநிதி அவர்கள் நான் ஒரு வகுப்புக்கு நீள்கதைப் பாடத்திட்டத்தைக் கற்பிக்க  விரும்புகிறேன் என்று முன்வந்து ஒன்றாம் வகுப்புக்கு இதை நடத்தி வருகிறார். பல வருடங்களாக உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தவர் ஒன்றாம் வகுப்புக்கு நீள்கதைப் பாடத்திட்டம் நடத்தத் தொடங்கினார்.

உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் வரும் குழந்தைகளின் தமிழறிவு எதிர்பார்த்ததுபோல் இல்லை என்பது அவரை  ஒன்றாம் வகுப்புக்கு இப்புதுமையான முறையில் தமிழ் நடத்தத் தூண்டியிருக்கலாம்.

நவம்பர் மாதத்தில் ஒருநாள்…

வகுப்பறை ஆய்வுக்குச் சென்ற எங்கள் பிரதிநிதி வேலவனிடம் அவர் பகிர்ந்துகொண்டது மிக மிக முக்கியமானது.

கதையின் நிகழ்வை ஆசிரியர் சுவைபட வாசிக்கும்போது அனைவரும் கவனமாகக் கேட்கின்றனர். கூற்றின் முடிவில் கேட்கும் பலபதில் வினாவுக்கு பதில் சொல்லத் தொடங்கும்போது வகுப்பில் சலசலப்பு ஏற்படத் தொடங்குகிறது. சிலர் இடத்தை விட்டு எழுந்து வந்து பதில் சொல்லத் தொடங்குகின்றனர். சில குழந்தைகள் இருந்த இடத்திலிருந்தே தாங்கள் நினைக்கும் பதிலை உரக்கச் சொல்கின்றனர்.

அடுத்தகட்டமாக கரும்பலகையில் எழுதிய பதில்களை வாசிப்பு உத்திகளைப் பயன்படுத்தி வாசிக்கத் தொடங்கும்போதும் குழந்தைகள் அங்கும் இங்கும் நடந்துகொண்டு, ஆசிரியரிடம் கேட்காமல் எழுந்து நின்று,  உற்சாகம் மிகுதியால் கரும்பலகைக்கு அருகில் வந்து… என வாசித்துக் காட்டுகின்றனர். சிலர் தங்களுக்குள் வாசித்துப் பார்த்துக்கொள்கின்றனர்.

அடுத்த படியாக கற்றல் அட்டை கொடுக்கும்போது இதே நிலைதான் வாசிக்கத் தெரியாத குழந்தைகள் பலர் ஆசிரியரைச் சுற்றி நின்று இது என்ன அது என்ன என்று சில சொற்களைச் சுட்டிக்காட்டி கேட்கின்றனர். மற்று சிலர் தங்களுக்குள் பேசி தாம் வாசிப்பது சரிதான் என்பதை உறுதி செய்கின்றனர். சிலர் வாசித்து முடித்துவிட்டு இது என்ன இப்படி இருக்கிறது, அது ஏன் அப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். சிலர் அடுத்த செயல்பாட்டுக்கு ஆயத்தமாகின்றனர்.

ஒரு வகுப்பு என்றால் குழந்தைகள் அனைவரும் ஆசிரியரைத் திறந்த கண்மூடாமல் பார்க்க, ஆசிரியர் நில்லாமல் பேச… ஆசிரியர் இடையிடையே கேட்கும் வினாக்களுக்கு  அவர் சுட்டிக்காட்டும் மாணவன் எழுந்து நின்று பதில் கூற… என இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர் முதல் முறையாக தன் அதிகாரத்தை இழந்து நிற்பதைப் பார்க்கிறேன்.

நீள்கதை வகுப்பிற்கு வந்தால், வகுப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் எல்லோருமே நீள்கதையோடு தொடர்புடைய செயல்பாடுகளைத்தானே செய்கிறார்கள். அவர்களை எதற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்து சும்மா விட்டுவிடுவேன்.  அது மட்டுமல்ல கட்டுப்படுத்துவது எப்படியென்று தெரியாமல் நான் செயலிழந்து நிற்கிறேன் என்பதுதான் உண்மை.

 

இருந்தாலும் எனக்கு ஓர் ஐயம். இது என்னுடைய வகுப்பில் மட்டுந்தானா இல்லை நீங்கள் வகுப்பை நடத்தினாலும் இதுபோல்தான் இருக்குமா என்று கேட்க வேலவனும் வகுப்பை நடத்தியிருக்கிறார். அதே சுதந்திரத்தோடு, அதே உற்சாகத்தோடு கற்றலில் மாணவர்கள் பங்கெடுத்தனர்.

அப்போது ஒரு சுவையான நிகழ்வு நடந்தது.

கற்றல் அட்டைகளை விநியோகம் செய்த வேலவன் எல்லோரும் பென்சில் எடுத்து தெரிந்த சொற்களுக்கு வட்டமிடுங்கள். தெரியாத சொற்களுக்கு அருகே கேள்விக்குறி இடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு ஒரு ஒன்றாம் வகுப்புக் குழந்தை “எதற்குக் கேள்விக் குறி இட வேண்டும். வட்டமிடாத சொற்கள் எல்லாம் தெரியாத சொற்கள்தானே?” என்று சொல்லியிருக்கிறார்.

இருவரும் மகிழ்ச்சியின் உச்சிக்கே போயிருக்கிறார்கள். இதைத்தானே நாம் எதிர்பார்க்கிறோம்.

கற்பதின் முழு பொறுப்பையும் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும்போது ஆசிரியரின் அதிகாரம் குறைகிறது. குழந்தைகளைக் கட்டிப்போடும்போது நாம் கற்றலையும் கட்டிப்போடுகிறோம். குழந்தைகள் பாடப்பொருளோடு தொடர்புடைய பல வேலைகளில் பல நிலைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது ஆசிரியர் செயலிழந்து நிற்கிறார்.

இது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நிலையை ஒவ்வொரு ஆசிரியரும் அடைய வேண்டும்.

கற்றல் நடப்பதற்கான சூழலை அமைத்துக்கொடுப்பவர் ஆசிரியர். கற்றல் நடப்பதற்கான ஏதுவாளர் ஆசிரியர் (Teacher is a facilitator) என்பது இங்கு முழுமையான பொருளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்காகத்தானே காத்திருந்தோம்.

திரு. க. கருணாநிதி அவர்களுக்கும் ஆதர்ஷ் வித்யா கேந்த்ரா பள்ளி ஆசிரியர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

 

ஜி. ராஜேந்திரன்

கல்வி இயக்குநர்

Qrius Learning Initiatives, Coimbatore

தொடர்புக்கு

வேலவன் – 9994196113

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s