குருவிக்கூடும் குழந்தை மொழியும்

 

 

நம் மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது.

அது பல பரிசோதனைகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

பரிசோதனை முடிவுகள் நமக்கு சில கருத்துகளை உணர்த்துகின்றன.

பல்வேறு அனுபவங்களின் மூலம் அக்கருத்துகள் உறுதிப்படுகின்றன.

இப்போது நாம் புரிந்துகொண்ட, உறுதிப்பட்ட அந்தக் கருத்துகளைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். இங்கு பிரச்சனை எழுகிறது.

அவருக்கு அந்த அனுபவங்கள் இல்லை.

அவர் பரிசோதனைகள் செய்து பார்க்கவில்லை

அவருக்கு நாம் புரிந்துகொண்ட, நம்மனத்தில் உறுதிப்பட்ட கருத்துகளைச் சொல்ல வேண்டும். புரிய வைக்க வேண்டும்.

என்ன செய்வது

இங்குதான் அவருடைய அனுபவங்களில் ஒன்றோடு தொடர்புபடுத்தி விளக்க நாம்முற்படுகிறோம். அதாவது எடுத்துக்காட்டுகளின் முக்கியத்துவம் இதுதான். அது பொருத்தமான எடுத்துக்காட்டுகளாக இருந்தால் அந்தக் கருத்தை குழப்பமில்லாமல் தெளிவாக அவரால் புரிந்துகொள்ள முடியலாம்.

எதற்கு இந்த நீண்ட முன்னுரை…

குழந்தைக்கு என்று ஒரு கற்றல் முறை இருக்கிறது. பள்ளிக்கு வருவதற்கு முன் அந்தக் கற்றல்முறையைப் பயன்படுத்தித்தான் நிறைய கற்று வந்திருக்கிறது. அந்தக் கற்றல்முறைதான் எதிர்காலத்திற்குத் தேவையானது. அந்தக் கற்றல்முறையைக் கூர்மைப்படுத்துவது, செழுமைப்படுத்துவதுதான் பள்ளிக்கூடங்கள் செய்ய வேண்டியது. கல்வி என்பது இதுதான் என்றெல்லாம் சொல்வோம் இருந்தாலும் அ, ஆ… என்றும் க கா கி கீ என்றும் தனித்தனி எழுத்துகளைக் கற்பிக்கிறோம். இது சரியல்ல என்று புரிய வைக்க வேண்டும்.

இங்கு வேலவன் பயன்படுத்திய எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பேருந்தின் பகுதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாம் பேருந்தின் சக்கரங்களை, இருக்கைகளை, யந்திரத்தை, வளையத்தை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய பின்பு பேருந்தை நாம் அறிமுகப்படுத்துவதில்லை. பேருந்து பொம்மையை வைத்து விளையாட அனுமதித்து, அதைப் பற்றிப் பேசும்போது வெகு இயல்பாக அதன் பகுதிகளின் பெயர்கள் கலந்துரையாடலில் இடம்பெறுகின்றன. இதுதானே குழந்தைக்கு ஏற்ற முறை…

நல்ல எடுத்துக்காட்டுதானே…

வேறொரு சூழலைப் பார்ப்போம்.

ஒவ்வொன்றையும் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகுதான் அடுத்த்துக்குப் போக வேண்டும் என்ற கருத்து எப்படியோ நம் மனத்தில் பதிந்துவிட்டது. ஒரு கருத்து, அதை விளக்கிச் சொல்லி, தேர்வு வைத்துப் பரிசோதித்துப் பார்த்து குழந்தை புரிந்துகொண்டது என்று உறுதிப்படுத்திய பிறகு அடுத்த கருத்து… என்று நாம் கற்பிக்கிறோம். இது மொழிக்கற்றலில் நடப்பதில்லை. நடக்கவும் செய்யாது. பல சூழல்களில் பல மொழிக்கூறுகளைக் குழந்தை உள்வாங்கிக்கொள்கிறது. அதை இயல்பான சூழலில் வெளிப்படுத்துகிறது. ஒரு கருத்தைப் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு குழந்தையும் எதை உள்வாங்கிக்கொள்கிறது என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் தொடர்ந்து சுவையான மொழிச்சூழலில் இருக்கும் குழந்தை எப்போதோ ஓர் அழகான வாக்கியத்தைச் சொல்கிறது. தான் நினைப்பதை குழப்பமில்லாமல் வெளிப்படுத்துகிறது.

இதை ஆசிரியர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இங்கும் எடுத்துக்காட்டு உதவிக்கு வருகிறது.

மதில் கட்டும்போது ஒவ்வொரு செங்கல்லாக வைத்து அதன் மேல் சாந்து பூசி உறுதிப்படுத்திவிட்டு அடுத்த செங்கற்களை அடுக்குவது என்பது ஒரு கருத்தைக் கற்பித்து அது உறுதியாக்க் குழந்தைக்குப் புரிந்துவிட்டது என்று உறுதிப்படுத்தியபிறகு அடுத்த கருத்துக்குச் செல்வது…

மொழிக்கற்றலை எப்படிச் சொல்வது

இங்கு வேலவன் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டு சுவையானது.

குருவிக்கூடு கட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா… சுள்ளிக்கம்பு, தேங்காய் நார் போன்ற பொருட்களை எங்கிருந்தெல்லாமோ எடுத்து வரும். எதை அடியில் வைக்கும், எதை மேலே வைக்கும் என்று தெரியாது. தொடக்க நிலையில் பார்த்தால் அது குப்பைமேடு போல் இருக்கும். ஆனால் கூடு கட்டியபிறகு பார்த்தால் அழகான அடுக்கு, அழகான அமைப்பு அக்கூட்டில் இருப்பதைப் பார்க்கலாம். இதுபோலத்தான் குழந்தைகளும் எங்கிருந்தெல்லாமோ மொழிக்கூறுகளை எடுத்துக்கொள்ளும். ஆரம்ப நிலையில் நம்மால் குழந்தை என்ன கற்றுக்கொண்டது என்று தெரியாது. ஆனால் மெல்ல மெல்ல அதற்கு ஓர் அடுக்கு வந்திருக்கும். மொழித்திறன் வளரந்திருக்கும். இதற்கு குழந்தையின் பிறகுமொழிக்கூறு (Universal Grammar) உதவுகிறது.

 

ஒவ்வொரு செங்கல்லாக வைத்து அதன் மேல் சாந்து பூசி… அந்த வரிசை உறுதியாகிவிட்டது, இனி அடுத்த வரிசை செங்கற்களை வைக்கலாம் என்பது போல் மொழிக்கற்றல் நடப்பதில்லை. இது தொடக்கத்தில் அழகான அடுக்குபோல் தெரிந்தாலும் வளரும்போது குழப்பநிலையை அடைகிறது.

உண்மையான மொழிக்கற்றல் குருவி கூடுகட்டுவது போல். பல சூழல்களில், பல கருத்துகளைப் பற்றிப் பேசும்போது, பல சொற்களை, வாக்கிய அமைப்புகளை, ஏற்ற இறக்கங்களைக் குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.  தொடக்க நிலையில் குழந்தை என்ன கற்றுக்கொண்டது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. குழப்பமாக இருக்கும்.

இனியாவது நம் செயல்களை மெல்ல மாற்ற முயற்சி செய்வோம்….  அடிக்கடி தேர்வு நடத்தி உறுதிப்படுத்துவதைக் குறைத்துக்கொள்வோம். சுவையான மொழிச்சூழலை அதிகப்படுத்துவோம்…

இந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான் Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஜி. ராஜேந்திரன்

கல்வி இயக்குநர்

Qrius Learning Initiatives, Coimbatore

தொடர்புக்கு

வேலவன் – 9994196113

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s