குழந்தைகள் செல்லப் பிராணிகள் அல்ல…

இதை நீ செய்தால் அதை நான் தருவேன் அல்லது செய்வேன் என்ற உத்தியை நாம் காலாகாலமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதுவும் கல்வி கற்பதில்.
நட்சத்திரம் இடுவதிலிருந்து, கிரேடு அல்லது மதிப்பெண் கொடுப்பதிலிருந்து என பல உத்திகளை நாம் பின்பற்றி வருகிறோம்.

ஒரு செயல்பாட்டில் ஈடுபட வெளியிலிருந்து பெரியவர்களும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்துவதற்கும் அந்த வேலையை செய்து முடிக்கும்போது குழந்தை அகமகிழ்வதற்கும் அவ்வாறு அதுபோன்ற வேறொரு செயலை புறவூக்கம் (Extrinsic motivation) இல்லாமல் அகவூக்கம் (Intrinsic motivation) கொண்டு செய்து முடிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

இங்குதான் ஒரு கற்றல் செயல்பாட்டை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் தேவை ஏற்படுகிறது. அந்தச் செயல்பாடு புதுமையானதாக, சவாலானாதாக, பிறருடன் சேர்ந்து செய்வதற்கேற்றதாக, எதிர்பாராத முடிவு உடையதாக இருப்பின் செயல்பாட்டில் புறவூக்கம் இல்லாமலே குழந்தைகள் ஈடுபட முன்வருகிறார்கள். அச்செயலைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே பரிசாக இருக்க வேண்டும். அதுவே அகவூக்கம்.

Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்டத்திலுள்ள பெரும்பான்மையான செயல்பாடுகளும் இத்தகைய அகவூக்கமளிக்கும் செயல்பாடுகளாக இருப்பதற்கு நாங்கள் பெரிதும் கவனம் எடுத்துக்கொண்டுள்ளோம்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து இதோ ஓர் எடுத்துக்காட்டு

பூங்குழலியின் வீட்டில் ஓர் எலி. அது அடிக்கடி சமையலறைக்கு வந்து காய்கறிகளைக் கறண்டி வைத்துவிடும். அது விரட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றனர். அவ்வாறு அவர்கள் கண்டுபிடித்த வழிதான் காய்கறிப் பூனை. பூசனிக்காய் வயிறு, முட்டைக்கோசு முகம், வெண்டைக்காய் முகம், முருங்கைக்காய் மீசை, புடலங்காய் வால்… என பூங்குழலியும் நண்பர்களும் காய்கறிகளை அடுக்கி வைக்க தின்ன வந்த எலி பயந்து ஓடும். இது கதையில் வரும் பகுதி. காய்கறிப்பூனை செய்ய முடியுமா என்பது செயல்பாடு.

இதோ மதுரை Officers Town லுள்ள CEOA பள்ளி மாணவர்கள் அமைத்த காய்கறிப்பூனை.

(அப்பள்ளி ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்.)

புறவூக்கம் அகவூக்கம் பற்றி நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் Alfie Kohn அவர்கள் எழுதிய கட்டுரையின் லிங்க் தரப்பட்டுள்ளது.

(https://www.alfiekohn.org/article/rewards-25-years-later/)

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore

தொடர்புக்கு –
வேலவன் – 9994196113

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s