நடக்காதது  நடந்தது…

 

“இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, இதே செயல்பாட்டை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் அப்போது நடக்காதது இப்போது நடந்தது. அதுவும் சிறப்பாக நடந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது”

நாமக்கல்லில் அமைந்துள்ள நவோதயா அகாதமி எல், கெ. ஜி. மற்றும் யு, கெ. ஜி வகுப்புகளின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி மேம் சொன்னபோது நாங்கள் அனைவரும் காதுகளைக் கூர்மையாக்கி அவர்கள் சொல்லப்போவதைக் கேட்க ஆயத்தமானோம்.

(ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து, அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியைச் சொல்வதும் நீள்கதைப் பாடத்திட்டத்தின் தாக்கமே)

குழந்தைகளும் நாங்களும் சேர்ந்து செடிகள் நடுவோம். அதைக் கவனிப்பதற்கான பொறுப்பை அவர்களுக்குக் கொடுப்போம். செடியின் வளர்ச்சியைப் பற்றிக் கவனிக்கச் சொல்லுவோம்…

இரண்டு வருடங்களுக்கு முன்பு செடிகள் நட்டோம். அத்தோடு சரி. எங்களுக்காக, ஆசிரியர்கள் சொல்கிறார்களே என்பதற்காக செடிகளை நட்டார்கள். இல்லையில்லை நாங்கள் நடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஆண்டு… யு, கெ. ஜி. பாடத்திட்டத்தில் வெண்மதிக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் இருக்கும் ரோஜாச் செடி ஒரு கதாபாத்திரம். கன்றுக்குட்டி வரும், செடியின் கொம்பைக் கடிக்கும், வெண்மதி அழுவாள். கன்றுக்குட்டி அதற்குப் பரிகாரம் செய்யும். பூக்கள் பூக்கும், பட்டாம் பூச்சி வரும்… வெயில் வரும், மழை வரும்… செடிகள் பேசும்… பூக்கள் பேசும்…

இந்த உணர்வுப் பூர்வமான பாடத்திட்டத்தின் வெளிப்பாடு என்ன…

ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தைகள் செடி நட்டார்கள். நாளும் கவனித்தார்கள். அதில் அரும்பு வந்ததும், குழந்தைகளின் முகங்களில் புன்னகை அரும்பியது. திங்கட்கிழமை காலையில் பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாகச் செடியைப் பார்க்கச் செல்கிறார்கள். செடி வாடியிருப்பதைப் பார்த்து முகம் வாடுகிறார்கள். ஆசிரியையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.

பள்ளித் தோட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நீள்கதையில் வரும் கதையோடு ஒப்பிடுகிறார்கள். தங்களை வெண்மதியாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு பாடத்திட்டம் எப்படிக் குழந்தைகளின் வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகால பணியில் இப்போதுதான் பார்க்கிறேன் ஐயா…”

என்றார் சாந்தி மேம்….

 

குழந்தைகள் இவ்வளவு உணர்வுப் பூர்வமாக நடந்துகொள்ள வேண்டுமானால் ஆசிரியர்கள் எவ்வளவு ரசித்து, அனுபவித்து இந்தப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எங்களால் உணர முடிகிறது.

நவோதயா அகாதமி பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்து பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

 

ஜி. ராஜேந்திரன்

கல்வி இயக்குநர்

Qrius learning Initiatives, Coimbatore

தொடர்புக்கு

வேலவன்  – 9994196113

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s