மொழிப்பாட உத்திகள் பிற பாடங்களுக்குப் பொருந்துமா?

நீள்கதைப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் என்னுடன் அடிக்கடி பேசுவதுண்டு. அப்படி ஒரு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சி கீழ்வரும் வினாக்களை என் மனத்தில் எழுப்பியது. தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களுக்கும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? கற்கும் முறையிலும் கற்பிக்கும் முறையிலும் வேறுபாடு வேண்டுமா? வேறுபாடு வேண்டும் … Continue reading மொழிப்பாட உத்திகள் பிற பாடங்களுக்குப் பொருந்துமா?

Qirus (Curious) and its importance

வகுப்பறையில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டையும் குழந்தைகளின் பக்கமிருந்து பார்க்கும்போது அவை திணிக்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம். உறுதியாக நம்புகிறோம். வேறு சுவையான செயல்பாடுகள் பற்றிய அறிமுகம் இல்லாதபோது எந்தச் செயல்பாடும் சற்று சுவையானதாகத் தோன்றும். அதனாலாயே அவை குழந்தைகளம் விரும்பும் செயல்பாடு அல்ல என்பது எங்கள் கருத்து. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான ஓர் அனுபவம் கிடைத்தால் அதை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும் – இதை நாங்கள் விருப்பம் என்கிறோம். அவர்களைக் கவரும் ஒரு நிகழ்வு நடந்தால் அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். – இதை நாங்கள் ஆர்வம் என்கிறோம். இதுவே கற்றலுக்கான ஆயத்தம் என்பது எங்கள் கருத்து. ஆர்வத்தோடு ஒரு செயல்பாட்டில் ஈடுபடும்போது அந்த ஈடுபாடு ஆழமானதாக இருக்கும். சலிப்பிருக்காது. மேலும் எதிர்பார்க்கும். அப்படிக் கற்றுக்கொள்வது சில நாட்களுக்காவது மறக்காமல் இருக்கும் என்று வகுப்பறை அனுபவங்களின் மூலம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை அறிவியல் ரீதியாக, … Continue reading Qirus (Curious) and its importance

K Y C = Know Your Child

பள்ளி திறந்து ஒருவாரம் ஆகிவிட்டது. மொழியாசிரியராகிய நமக்குக் கீழ்வரும் சூழல்களுள் ஏதேனும் ஒன்று ஏற்படலாம். 1. எல்லா வகுப்புகளுக்கும் மொழிப்பாடம் நடத்தச் செல்வது 2. கீழ்வகுப்புகளில் வகுப்பாசிரியராகச் செயல்பட்டு கூடவே மொழிப்பாடத்தையும் நடத்துவது 3. ஒருசில வகுப்புக்கு மட்டும் மொழிப்பாடம் நடத்துவது எது எப்படி இருந்தாலும் இரண்டே இரண்டு சூழல்கள்தாம் நிலவுகின்றன. 1. சென்ற வருடம் … Continue reading K Y C = Know Your Child

மொழிகற்றலின் நோக்கம் என்ன?

முகநூல் நண்பர் திரு சிவராமன் அவர்கள் கீழ்வரும்படி கேட்டிருந்தார். மொழிக்கல்வி என்பதற்கான குறிக்கோள் என்ன? ஒரு நபர் ஒரு மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கான அளவீடுகள் என்னென்ன? மொழிக்கல்வியை நாம் சரியாக அணுகுகிறோமா என்பதையே நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். மண் சேறு எல்லாம் வாரி இறைக்காமல் உரையாடலாம்‌ வாருங்கள். என் கருத்து இங்கு மொழிக்கல்வி என்பதை தாய்மொழிக்கல்வி என்று எடுத்துக்கொண்டு என் கருத்துகளைக் கூற முயற்சி செய்கிறேன். இதுவும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, பட்டப்படிப்பு என்று எடுத்துக்கொண்டால் குறிக்கோள் மாறுபடலாம். மொழிக்கல்வியின் நோக்கம் காலாகாலத்திற்கு மாறுபட்டுள்ளது. பனையோலை ஏடுகள் இருந்த காலத்தில் பிரதி எடுப்பது என்பது மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆசானிடம் மட்டும் ஒரு பிரதி இருக்கும். எனவே நூல்களை மனனம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காக பாடம் கேட்டல்முறை பின்பற்றப்பட்டது. உருவிட்டு ஒரு நூலை அல்லது நூலின் ஒரு பகுதியை மனனம் செய்வது முதற்படி. நான் படித்த … Continue reading மொழிகற்றலின் நோக்கம் என்ன?

அது யார் என்று சொல்ல முடியுமா?

மூன்று நாள் பயிற்சி ஒரே பயிற்சியாளர் மூன்றாம் நாள் முடிவில் என்னென்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் வேறு வேறு பதில்கள் வருகின்றன. ஓர் ஆசிரியர் ஓராண்டு கற்பித்தல் நடக்கிறது. ஆனால் ஆண்டு முடிவில் எல்லோரும் ஒரேபோல் கற்பதில்லை. இது ஒரு புதிர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் ஒன்று இந்தக் காரணமாகவும் இருக்கலாம் என்று … Continue reading அது யார் என்று சொல்ல முடியுமா?

அந்த அதிக இரண்டு கோப்பைத் தேநீர்…

எனக்குத் தெரிந்த ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஜூன் ஜூலை மாதங்களில் மொட்டு வகுப்புகள் (எல். கெ. ஜி. வகுப்புகள்) எடுக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு தேநீர் அதிகம் வழங்குவார்கள். ஏன் தெரியுமா? மழலை வகுப்பில் சேரும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துடன் ஒன்றிவர இரண்டு மாதங்கள் தேவைப்படுமாம். அதுவரை அக்குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது பெரிய சிரமமாம். அச்சிரமத்தை ஈடுகட்ட … Continue reading அந்த அதிக இரண்டு கோப்பைத் தேநீர்…

தேன்மொழி அல்லது கேள்வியின் நாயகி…

பெரும்பாலான மொழி வகுப்புகளில் வினாவுக்கு விடை எழுதுவதுதான் முக்கிய எழுத்துச் செயல்பாடாக இருக்கிறது. உயர் வகுப்புகளிலும் கூட நிலைமை இதுதான். அதுவும் பாடப்பகுதியில் தரப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதியை அப்படயே அச்சு பிசகாமல் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது மாணவர்களிடம் வளரவேண்டிய மொழித்திறன்களுள் பத்து விழுக்காடு மட்டுமே என்பது என் உறுதியான கருத்து. அதனால்தான் பெரும்பான்மையான … Continue reading தேன்மொழி அல்லது கேள்வியின் நாயகி…

கல்வியும் ஆயிரங்காலத்துப் பயிர்தான்…

சென்ற சனிக்கிழமை சென்னை சைத்தாப்பேட்டையில் அமைந்துள்ள கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நூறு பெற்றோர்களைச் சந்தித்தேன். அவர்களுள் மழலை, மொட்டு வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிகமாக இருந்தனர். ஒருமணி நேரத்திற்கு என்று தொடங்கிய கூட்டம் இரண்டரை மணிநேரத்திற்கு நீண்டது. பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில், உயர்வில் எவ்வளவு அக்கறை! குழந்தைகளைப் பற்றி எத்தனை யோசித்திருக்கிறார்கள்! எவ்வளவு கவனித்திருக்கிறார்கள்! … Continue reading கல்வியும் ஆயிரங்காலத்துப் பயிர்தான்…

விட்டாச்சு லீவு….

கோடைவிடுமுறை வந்துவிட்டது. குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? கோடைக்கால முகாமில் கொண்டு விட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளலாமா? இல்லை அடுத்த வகுப்புப் பாடங்களுக்கு இப்போதோ ட்யூஷன் டீச்சரைப் பார்த்து ஏற்பாடு செய்யவா? தயவு செய்து அடுத்த வகுப்புப் பாடங்களை இப்போதிருந்தே படி என்று சொல்லாதீர்கள். உண்மையாகவே மூளைத்திறன் வளர வேண்டுமானால் சில காலம் ஓய்வு தேவை. … Continue reading விட்டாச்சு லீவு….

கல்வியில் அஸ்திவாரம் என்பது என்ன?

கடந்த சனியும் ஞாயிறும் சென்னையில் இருந்தோம். ஐந்து கூட்டங்கள். பள்ளியின் தாளாளர்களுடன் நடந்த உரையாடல் முதல் நண்பர்களுடன் அரட்டை வரை பொழுதுபோவது தெரியாமல் உரையாடினோம். அந்த உரையாடலின் மொத்தக் கருப்பொருளும் கல்விதான். உங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா? உங்கள் ஆசிரிய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது? ஆசிரியர்களிடம் ஒரு கருத்தைச் சொல்ல முயற்சி … Continue reading கல்வியில் அஸ்திவாரம் என்பது என்ன?