8. செய்தித் துணுக்குகளும் என் கருத்தும்

பின்லாந்து கல்விப் பயணம் – 8 செய்தித் துணுக்குகளும் என் தனிப்பட்ட கருத்தும் 1. வகுப்பறைகள் பெரியதாக இருந்தாலும் நாம் மெதுவாகப் பேசினாலும் அனைவருக்கும் கேட்கும்படி ஒலிக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் சிரமத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. 2. சுத்தம் சுத்தம் அப்படியொரு சுத்தம். பள்ளியும் வகுப்பறைகளும் துடைத்து வைத்த கண்ணாடி போல் பளிச்சென்று இருக்கின்றன. 3. … Continue reading 8. செய்தித் துணுக்குகளும் என் கருத்தும்

7. கூட்டு முயற்சியே வலுவானது

பின்லாந்து கல்விப் பயணம் – 7 கூட்டு முயற்சியே வலுவானது. பத்து ஒன்றுகள் சேர்ந்தால் பத்து என்பது கணக்கு. ஆனால் பத்து மனிதர்கள் சேர்ந்தால் பத்து மனிதர்களின் தனிப்பட்ட ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றல் அங்கு உருவாகிறது. இதை ஆங்கிலத்தில் synergy என்று சொல்வார்கள். நாங்கள் பார்த்த பள்ளியில் இது எப்படி செயலாக்கம் பெறுகிறது என்று பார்ப்போம். … Continue reading 7. கூட்டு முயற்சியே வலுவானது

6. ஆசிரியர்கள் பொறுமையின் சிகரங்கள்

பின்லாந்து கல்விப் பயணம் – 6 பின்லாந்து ஆசிரியர்களுக்கு எந்த அவசரமும் இல்லை. நான் கவனித்த இரண்டு வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு எந்த அவசரமோ பரபரப்போ இல்லை. எல்லா குழந்தைகளும் தனிப்பட்டவர்கள் (Children are unique) என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். நான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டது போல் ஒரு கருத்து அறிமுகமாகி, அதைப் புரிந்துகொண்டு, அது … Continue reading 6. ஆசிரியர்கள் பொறுமையின் சிகரங்கள்

5. அனைத்தும் குழந்தைகளுக்காக மட்டுமே

பின்லாந்து கல்விப் பயணம் – 5 பின்லாந்து பள்ளிகள் செயல்படுவது குழந்தைகளுக்காக மட்டுமே. பள்ளியின் ஒவ்வொரு செயல்பாடும் குழந்தைகளை மனத்தில் வைத்தே வடிவமைக்கப்படுகின்றது. நாங்கள் பார்வையிட்ட பள்ளியில் நான் கவனித்தவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். 1. உலக நிகழ்வுகளின் அடிப்படையில் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் குழந்தைகள் கேள்வி கேட்பார்கள். அவர்கள் அக்கருத்தோடு தொடர்புடைய … Continue reading 5. அனைத்தும் குழந்தைகளுக்காக மட்டுமே

4. மாற்றம் எப்படி நடக்கிறது?

பின்லாந்து கல்விப் பயணம் – 4 இப்போது பின்லாந்தில் Phenomenal Based Curriculum என்ற ஒரு புதுப்பாடத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது உலகில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கும். உலகம் வெப்பமயமாதல், பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியம், கலாச்சார அழிவு, தன்னிறைவுடன் வாழ்தல்… போன்ற பல மையக் கருத்துகளோடு தொடர்புடைய செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இங்கு மொழிப்பாடம், … Continue reading 4. மாற்றம் எப்படி நடக்கிறது?

3. முழு வளர்ச்சிபெற காத்திருக்கிறார்கள்

பின்லாந்து கல்விப் பயணம் – 3 ஏழுவயதுவரை முறையான கற்பித்தல் இல்லை. ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளைக் கவனிக்காமலும் விட்டுவிடுவதில்லை. பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கும் வகுப்புகள் இருக்கின்றன. ஆனால் எ, பி, சி, டி… என எழுத்துகள் கற்பிக்கப்படுவதில்லை. கட்டம் போட்ட குறிப்பேட்டில் கையைப் பிடித்து எழுத வைப்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்குப் பிடித்தமான சொற்களாலும் … Continue reading 3. முழு வளர்ச்சிபெற காத்திருக்கிறார்கள்

2. ஆசிரியர்கள் நெடுந்தூண்கள்

பின்லாந்து கல்விப் பயணம் – 2 பின்லாந்து கல்விமுறையின் நெடுந்தூண்கள் ஆசிரியர்கள். ஒரு பள்ளியின் தரம் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் தரத்தைவிட உயராது என்பது அனைவருக்கும் தெரிந்த கருத்துதான். ஆனால் அக்கருத்தைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய நாடு என்று பின்லாந்தை உறுதியாகச் சொல்லலாம். ஆசிரியர் தேர்வுக்கு கல்வியியலில் உயர் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கல்வியோடு தொடர்புடைய … Continue reading 2. ஆசிரியர்கள் நெடுந்தூண்கள்

1. தொடர் ஆரம்பம்

பின்லாந்து கல்விப் பயணம் – 1 நவம்பர் மாதம் ஆறாம் தேதி பின்லாந்து சூப்பர்செல் அலுவலகத்தில் நடந்த #Helsinki Education Week Masterclass கூட்டத்தில் தொடக்கப் பள்ளியில் கணிதம் கற்பிப்பது பற்றி அரை மணிநேரம் பேசினேன். நீள்கதைப் பாடத்திட்டம் பற்றி அநூப் பேசினார். அதற்குப் பிறகு நடந்த உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியில் புதுமை புகுத்தும் நூறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடந்தது. அதற்கிடையே அரை நாள் ஒரு பள்ளியைப் பார்க்கவும் அங்குள்ள ஆசிரியர்களுடன் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொண்ட கல்வியாளர்களுடன் பேசவும் அவர்கள் தங்களுடைய புதுமையை நேயர்களின் முன்னிலையில் விவரிப்பதைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. கூடவே பின்லாந்திலுள்ள பல ஆசிரியர்களுடன் அளவளாவும் முடிந்தது. உலகெங்கிலும் கற்றல் கற்பித்தலில் நடக்கும் நல்ல நிகழ்வுகளை அனைவரும் பகிர்ந்துகொள்ளவும், அக்கருத்துகளைப் பயன்படுத்தி தங்களுடைய செயல்பாட்டை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட HundrED என்ற அமைப்பு இந்த நிகழ்வை நடத்துகிறது. தனிப்பட்ட அழைப்பின் பேரில் மட்டுமே … Continue reading 1. தொடர் ஆரம்பம்