பருந்துப் பார்வை அல்லது சுதர்சனம் – 1 (கல்வி பற்றிய ஒரு குறுந்தொடர்)

  நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு பள்ளி முதல்வருடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. சற்று விரிவான கலந்துரையாடல். ஒரு பெரிய பள்ளியின் தாளாளர் இவ்வாறு நேரம் ஒதுக்கி என்னுடன் பேசுவதற்கு அவரைத் தூண்டியது எது என்று யோசித்தேன். பயிற்சியில் நாங்கள் பேசிய கருத்துகள் வெறும் கருத்துகள் அல்லவென்பதும், அவை வகுப்பறையில் உண்மையிலே மாற்றங்கள் கொண்டு வந்துள்ளன … Continue reading பருந்துப் பார்வை அல்லது சுதர்சனம் – 1 (கல்வி பற்றிய ஒரு குறுந்தொடர்)

வேலிக்குள் நிற்குமா மனம்?

  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பெடுக்க வந்த ஆசிரியரைச் சுற்றி நின்று நடனமாடி அவரைக் கேலி செய்து வகுப்பெடுக்கவிடாமல் தடுத்த ஒரு காணொளி கண்டேன். • மாணவர்கள் ஓர் ஆசிரியரைச் சுற்றி நடனமாடி, நக்கல் செய்து, அவரை வகுப்பெடுக்கவிடாமல் தடுக்கும் அளவுக்கு வெறுப்பு வந்தது ஏன்? • அந்த ஆசிரியரால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற … Continue reading வேலிக்குள் நிற்குமா மனம்?

நடக்காதது  நடந்தது…

  “இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, இதே செயல்பாட்டை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் அப்போது நடக்காதது இப்போது நடந்தது. அதுவும் சிறப்பாக நடந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” நாமக்கல்லில் அமைந்துள்ள நவோதயா அகாதமி எல், கெ. ஜி. மற்றும் யு, கெ. ஜி வகுப்புகளின் … Continue reading நடக்காதது  நடந்தது…

அது ஒரு துணிச்சலான செயல்

  நாம் எப்போது ஒரு துணிச்சலான செயலைச் செய்திருக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். அந்தச் செயலைச் செய்ய நமக்கு தைரியம் தந்தது எது? நம் பின்னணியில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற எண்ணம் அந்தத் துணிச்சலான செயலைச் செய்வதற்கான உந்துதல் தந்திருக்கிறது என்பதைக் காணலாம். நம்முடைய சில முயற்சிகளுக்கு உதவி செய்திருக்கிறார். வீட்டினரும் … Continue reading அது ஒரு துணிச்சலான செயல்

புதைந்து கிடக்கும் பெருவாய்ப்பு

  இந்தக் காணொளியை நான் பலமுறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதுப்புது ரசனை தருகிறது. இந்தக் குழந்தையின் உணர்ச்சி மாற்றத்தை, குரல் ஏற்றத்தாழ்வை, உடல் மொழியை, கண்கள் விரிந்து சுருங்குவதை… பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்பப்பா… அற்புதம்… அதியற்புதம். இக்குழந்தை பெரியவர்களைப் பார்த்து இது போல் பேசக் கற்றுக்கொண்டது என்று ஏற்றுக்கொள்ள என்னால் முடிவதில்லை. தொலைவிலுள்ள … Continue reading புதைந்து கிடக்கும் பெருவாய்ப்பு

85 க்கு 55…  இது சரியா…?

  இரண்டு வாரங்களுக்கு முன்பு சில ஆசிரியர்களிடம் “அரையாண்டுத் தேர்வையும் சேர்த்து இக்கல்வியாணடில் இதுவரை மொத்தம் எத்தனை நாட்கள் தேர்வுக்காக, குழந்தைகளை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தியிருக்கிறீர்கள்?” என்று கேட்டிருந்தேன். தேர்வு முடிந்த தருணத்தில் நான்கைந்து ஆசிரியர்கள் அதற்கான பதிலைக் கூறினர். சராசரி ஐம்பத்தைந்து நாட்கள் குழந்தைகளை மதிப்பிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மாதத்தேர்வு, அலகுத் தேர்வு, காலாண்டுத் … Continue reading 85 க்கு 55…  இது சரியா…?

குழந்தைகள் செல்லப் பிராணிகள் அல்ல…

இதை நீ செய்தால் அதை நான் தருவேன் அல்லது செய்வேன் என்ற உத்தியை நாம் காலாகாலமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதுவும் கல்வி கற்பதில். நட்சத்திரம் இடுவதிலிருந்து, கிரேடு அல்லது மதிப்பெண் கொடுப்பதிலிருந்து என பல உத்திகளை நாம் பின்பற்றி வருகிறோம். ஒரு செயல்பாட்டில் ஈடுபட வெளியிலிருந்து பெரியவர்களும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்துவதற்கும் அந்த வேலையை செய்து முடிக்கும்போது … Continue reading குழந்தைகள் செல்லப் பிராணிகள் அல்ல…

குருவிக்கூடும் குழந்தை மொழியும்

    நம் மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது. அது பல பரிசோதனைகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பரிசோதனை முடிவுகள் நமக்கு சில கருத்துகளை உணர்த்துகின்றன. பல்வேறு அனுபவங்களின் மூலம் அக்கருத்துகள் உறுதிப்படுகின்றன. இப்போது நாம் புரிந்துகொண்ட, உறுதிப்பட்ட அந்தக் கருத்துகளைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். இங்கு பிரச்சனை எழுகிறது. அவருக்கு அந்த அனுபவங்கள் இல்லை. … Continue reading குருவிக்கூடும் குழந்தை மொழியும்

அதிகாரத்தை இழக்க நீங்கள் தயாரா…?

  நாகர்கோவிலிலுள்ள ஆதர்ஷ் வித்யா கேந்தராவில் இந்தக் கல்வியாண்டு முதல் Qrius Learning Initiatives ன் நீள்கதைப் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் முன்னோடியாக நடந்த மூன்று நாள் பயிற்சியில் கலந்துகொண்ட அப்பள்ளியின் தமிழ்த்துறைத் தலைவர் திரு. க. கருணாநிதி அவர்கள் நான் ஒரு வகுப்புக்கு நீள்கதைப் பாடத்திட்டத்தைக் கற்பிக்க  விரும்புகிறேன் என்று முன்வந்து ஒன்றாம் … Continue reading அதிகாரத்தை இழக்க நீங்கள் தயாரா…?

8. செய்தித் துணுக்குகளும் என் கருத்தும்

பின்லாந்து கல்விப் பயணம் – 8 செய்தித் துணுக்குகளும் என் தனிப்பட்ட கருத்தும் 1. வகுப்பறைகள் பெரியதாக இருந்தாலும் நாம் மெதுவாகப் பேசினாலும் அனைவருக்கும் கேட்கும்படி ஒலிக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் சிரமத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. 2. சுத்தம் சுத்தம் அப்படியொரு சுத்தம். பள்ளியும் வகுப்பறைகளும் துடைத்து வைத்த கண்ணாடி போல் பளிச்சென்று இருக்கின்றன. 3. … Continue reading 8. செய்தித் துணுக்குகளும் என் கருத்தும்